Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உங்கள் ஊர் எம்.பிக்கு என்ன சலுகை?

நீங்கள் தேர்ந்தெடுத்த எம்.பிக்களுக்கு என்னென்ன சலுகைகள் கொடுக்கப்படுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் சில இதோ...

 



எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் மாதம் ஒன்றுக்கு 50,000 ரூபாய்யை சம்பளமாக பெறுகிறார், மேலும் ஒரு நாள் அவர் பாராளுமன்ற பதிவேட்டில் கையெழுத்திட்டால் தினப்படியாக அவருக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது. அவரது மாதச் செலவுகளுக்காக ரூபாய் 45,000 வழங்கப்படுகிறது. இதில் 15,000 ரூபாய் ஸ்டேஷனரி செலவுகளுக்கும், மீதமுள்ள 30,000 ரூபாய் அவரது அலுவலக செலவுகளுக்கும் வழங்கப்படுகிறது.

பயணச்சலுகையாக விமான போக்குவரத்திற்கு நான்கில் ஒரு பங்கு கட்டணம் என்ற அளவிற்கும்,முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ரயில்வே பாஸ் போன்றவை வழங்கப்படுகிறது.

எம்.பி தங்கும் வீடோ அல்லது விடுதியோ இலவசமாக வழங்கப்படும் அல்ல்து அவர் பங்களா வசதி வேண்டும் என்று கூறினால் அதுவும் இலவசமாக வழங்கப்படும்.மேலும் அவர்களது உறவினர்கள் வந்தால் தங்கவும் வசதிகள் செய்து தரப்படும்.

எம்.பி ஒருவருக்கு வாகனம் வாங்க 4 லட்ச ரூபாய் கடனாக வழங்கப்படும் அது ஆறு தவணைகளாக அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.மேலும் அவர் மூன்று தொலைபெசி இணைப்புகளை வைத்துக்கொள்ளலாம் ஒன்று அவர் டெல்லியில் தங்கியிருக்கும் வீடு, இரண்டாவது அவரது அலுவலகம் மற்றும் மூன்றவது அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி அல்லது அவரது வீடு என்றவாறு வழங்கப்படுகிறது.

எம்.பி ஒவ்வொருவருக்கும் 3ஜி சேவை கொண்ட இரண்டு அலைபேசி இணைப்பு வழங்கப்படுகிறது. அதில் அவர் ஆண்டுக்கு 1,50,000 அழைப்புகளை இலவசமாக பேசலாம், இதில் 3ஜி டேட்டா கட்டணங்களுக்கும் சலுகை உண்டு.

நாம் தேர்ந்தெடுக்கும் எம்.பிக்கு இது போன்று இன்னும் எண்ணற்ற பல சலுகைகள் அரசால் வழங்கப்படுகின்றன.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP