Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 318 புள்ளிகள் அதிகரிப்பு


இன்று (மே 23, வெள்ளிக் கிழமை) பங்கு வர்த்தகம் ஆரம்பமே உயர்வில் தொடங்கியது. நிஃப்டி புள்ளிகள் 7300க்கு மேல் வர்த்தகத்தை தொடங்கியது. காலை 9.45 மணிக்கு சென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்ந்து 24667 ஆகவும், நிஃப்டி புள்ளிகள் 77 உயர்ந்து 7354 ஆகவும் காணப்பட்டது. மதியம் 12.50க்கு சென்செக்ஸ் 236 புள்ளிகளும், நிஃப்டி 63 புள்ளிகளும் உயர்ந்து முறையை 24610, 7330 ஆக காணப்பட்டது.


வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 319 புள்ளிகள் அதிகரித்து 24693-ல் நிலைபெற்றது. நிஃப்டி புள்ளிகள் 91 அதிகரித்து 7367-ல் நிலை பெற்றது.

நான்காம் காலாண்டில் ஐடிசி நிறுவனத்தின் நிகர லாபம் 18% அதிகரித்து ரூ. 2276 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-ன் நிகர லாபம் நான்காம் காலாண்டில் 7.8% குறைந்து ரூ. 3,299 கோடியாக உள்ளது. இதன் சொத்து தரம் அதிகரித்ததால் பங்கின் விலை 52 வார உச்ச விலையான 2650  ரூபாயை தொட்டது. ஒரேநாளில் 4.72% பங்கின் விலை அதிகரித்தது.
 
678 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்தும் 82 பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன. என்டிபிசி, டாடா பவர், சேச ஸ்டெர்லைட், பி ஹெச்.இ.எல், மாருதி சுசூகி பங்கு விலைகள் அதிகரித்து காணப்பட்டன.
அதே நேரத்தில் ஹெச்.டிஎஃப்சி, கெயில், ஹிண்டால்கோ, இன்ஃபோசிஸ், விப்ரோ பங்குகள் விலை குறைந்து காணப்பட்டன.

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 58.48 ஆக காணப்பட்டது. வியாழக்கிழமை மதிப்பில் பெரிய மாற்றம் இல்லை.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ