Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலீட்டுக்கு காத்திருக்கும் திட்டங்கள்

உற்பத்தி, தொழில்துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் சார்ந்து சுமார் 108 திட்டங்கள் முதலீட்டை எதிர்நோக்கி காத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

டாடா ஸ்டீல்,  ஹிண்டால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் திட்டங்களும் இதில் அடங்கும். இநத் திட்டங்களுக்கு ரூ.2.26 லட்சம் கோடி முதலீடு தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 108 திட்டங்களில் மின்சாரம், ஆட்டோ மொபைல், சாலைகள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வர்த்தக ரீதியிலான ரியல் எஸ்டேட் திட்டங்களும் அடங்கும்.
 
முக்கியமாக ரியல் எஸ்டேட் துறை சார்ந்து சுமார் 50 திட்டங்களுக்கு 61 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்ட மதிப்பீடு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலானது. நிதி அமைச்சகம் ஏற்கனவே பல்வேறு வகையில் 169 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீடுகளுக்கான ஒப்புதலை புதிய அரசாங்கம் பொறுபேற்றதும் கிடைக்கும் என்கிற எதிர்பார்க்கப்படுகிறது.

திட்ட மதிப்பின் அடிப்படையில் எண்ணெய் மற்றும் எரிவாயு, இரும்பு மற்றும் உருக்கு போன்ற துறைகளுக்கு அதிக முதலீடு எதிர்பார்த்தாலும், திட்ட எண்ணிக்கையில் ரியல் எஸ்டேட் துறை சரி பாதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close