Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி டெக்னிக்கல்: எக்ஸ்பைரிக்கு பின்னால் சர்ப்ரைஸ் மூவ்கள் வரலாம்...!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:

எக்ஸ்பைரிக்கு பின்னால் சர்ப்ரைஸ் மூவ்கள் வரலாம்
.
தற்போதைய டெக்னிக்கல் டிரெண்ட்:

நிஃப்டி                        டார்கெட்    டிரெண்ட்    சப்போர்ட்    ரெசிஸ்டென்ஸ்   
வார ரீதியாய்           7435            மேலே                7260                7505   
மாத ரீதியாய்          7620            மேலே                 7125                 7620   

தற்சமயம் இருக்கின்ற முக்கியமான மூன்று மைனர் சப்போர்ட் மற்றும் ரெசிஸ்டென்ஸ்கள்
சப்போர்ட்     ரெசிஸ்டென்ஸ்   
7315                    7435   
7260                    7500   
7225                     7620   

ஏற்ற / இறக்கங்கள்(வாலட்டைலிட்டி) தொடரவே வாய்ப்புள்ளது என்றும் சிறிதளவு பிராஃபிட் புக்கிங் வருவதற்கு வாய்ப்பிருப்பதனாலேயே வாலட்டைலிட்டியை எதிர்பார்க்கலாம் என்றும் ஷார்ட் சைட் வியாபாரம் செய்யவே கூடாத தருணம் இது என்றும் சொல்லியிருந்தோம்.நான்கு நாட்கள் ஏற்றத்தையும், ஒரே ஒரு நாள் இறக்கத்தையும் சந்தித்த நிஃப்டி வார இறுதியில் வாராந்திர அளவில் 164 பாயிண்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது. வரும் வாரத்தில் வெள்ளியன்று இந்திய ஜிடிபி டேட்டா (க்யு1 ஒய்ஓஒய்) வெளிவர உள்ளது. அமெரிக்க டேட்டாக்களில் செவ்வாயன்று கன்ஸ்யூமர் கான்பிடன்ஸூம், வியாழனன்று ஜிடிபி டேட்டா எஸ்ட்டிமேட்டும் வெளிவர உள்ளது.

புதிய அரசு பதவி ஏற்பு, மந்திரிகள் பட்டியல் என இந்திய அரசியல் நிகழ்வுகளும், மே மாத எக்ஸ்பைரியும் இருப்பதால் வாலட்டைலிட்டிக்கு பஞ்சம் இருக்காது எனலாம். எனவே, டிரேடர்கள் வியாபாரத்தின் அளவினை குறைத்துக்கொள்வதே சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். எக்ஸ்பரியன்று பெரிய அளவிலான வாலட்டைலிட்டியையும், அதற்கு அடுத்த நாள் டிரெண்டில் திடீர் மாறுதல் வந்துபோவதையும் சந்திக்க நேரலாம்.

ஒவர் நைட் பொசிஷன்களை தவிர்த்து பாப்புலரான ஸ்டாக்குகளில் மட்டும் சிறிய எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்டான ஸ்டாப்லாஸிடன் வியாபாரம் செய்யுங்கள். உடனுக்குடன் லாபத்தை புக் செய்துகொள்வதே மிகமிக நல்லது. லாபத்தை வளர விடுவோம் என்று நினைத்து திடீர் ஸ்விங்குகளில் நஷ்டம் செய்துகொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொண்டு டிரேடர்கள் செயலாற்றவேண்டும்.

என்னதான் ஸ்ட்ராங்கான புல்லிஷ் மூவ்கள் கண்ணில் தெரிந்தாலும் ஏதேனும் செய்திகள் நெகட்டிவ்வாக வந்தால் வேகமானதொரு சரிவை நிஃப்டி சந்திக்கும் வாய்ப்பும் சரிசமமாக இருக்கிறது. அதனாலேயே மிகவும் எச்சரிக்கையுடன் டிரேடிங்கில் ஈடுபடவேண்டிய நேரமிது.
 

23- 05 -14 அன்று குளோசிங்கில் இருக்கும் நிலைமை.
டெக்னிக்கல்:

புதிதாய் புல்லிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்;
ஐஐஎப்எல் (119.85), டிசிஎஸ் (2127.90), டெக் மஹிந்திரா (1786.35), பிஐ இண்ட் (299.15), பிவிபி (9.10), ஓஎன்ஜிசி (407.95), ரிலையன்ஸ் (1127.45), லஷ்மி விலாஸ் (97.35), ருச்சிசோயா (43.30), ஆர்இசி (350.45), அம்டெக் ஆட்டோ (198.10), கிரீவ்ஸ் காட்டன் (103.45), ஜிஐபிசிஎல் (91.80), அப்பல்லோ டயர் (186.75), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்(1265.90)குறைந்த எண்ணிக்கையில் மிகுந்த எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யுங்கள்.

புதிதாய் பியரிஷ் கிராஸ் ஓவர் நடந்த ஸ்டாக்குகள்:

இந்த் ஹோட்டல் (90.05), டாபர் (183.15), கம்மின்ஸ் இண்ட் (628.60), அன்சல்பிஐ (35.75), ஜேஎம் ஃபைனான்சியல் (37.10), நோசில் (22.80), பிஎஃப்எஸ் (25), எஃப்எஸ்எல் (30.75), இஞ்சினியர்ஸ் இண்ட்(297.55), எஸ்ஆர்இஐ இஃன்ப்ரா (43.45), பிபோகஸ் (34.30), இஃன்ப்ரா டெல் (235.85), ஐவிஆர்சிஎல் இஃன்ப்ரா (29), ஐஓசி (363.70), ஹெச்சிசி (37.95), கீதாஞ்சலி (97.75), ஆஷாபுராமின் (77.30), ஹிந்த் காப்பர் (103.55), என்எஃப்எல் (38.25). நிப்டியின் டிரெண்டை அனுசரித்து வியாபாரம் செய்யவும்.
 
உறுதியாய் வாரந்திர டிரெண்ட் ஏற்றத்தில் மாறிய ஸ்டாக்குகள்

(டிரேடிங்கிற்கு வாட்ச் செய்ய உகந்தது):
 
டென் (194.60), பிவிபி (9.10), பார்தி ஏர்டெல் (343.65), லஷ்மி இஎஃப்எல் (26.30), ரெயின் (48.90), அலெம்பிக் (20.70), நெக்லைப் (32.40), மார்க்சன்ஸ் (26.70), ஜிந்தால் ஸ்டீல்(300.75), அம்டெக் ஆட்டோ (198.10), பூர்வா (87), கேஆர்பிஎல் (69.45), ரசோய்பிஆர் (17.80), ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் (1265.90), போலாரிஸ் (200.60), ஓரியண்ட் பேங்க் (355.30).  டிரேடர்கள் மத்தியில் பாப்புலர் அல்லாத ஸ்டாக்குகள் சில இவற்றில் இருக்கின்றன. எனவே, குறைந்த எண்ணிக்கையிலும் மிகுந்த கவனத்துடனும் வியாபாரம் செய்யுங்கள்.

உறுதியாய் வாரந்திர டிரெண்ட் இறக்கத்தில் மாறிய ஸ்டாக்குகள்

(டிரேடிங்கிற்கு வாட்ச் செய்ய உகந்தது):

கெடில்லா ஹெல்த்கேர் (928.60), எம்பிஎஸ்(331). இதில் லாங் சைட் வியாபாரத்தை முழுமையாகத் தவிருங்கள்.

சற்று பாசிட்டிவ் டிரேண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள்:

ஐஐஎப்எல் (119.85), என்டிபிசி (160.20), ஓஎன்ஜிசி (407.95), எவரெடி (65.20), பவர்கிரிட் (130.85), ரெயின் (48.90), டாக்டர்டட்சன்ஸ் (20.50), மஹா பேங்க் (48.90), பிஎஸ்பி (62.70), பிந்தால் அக்ரோ (34.35), மார்க்சன்ஸ் (26.70), ஆர்இசி (350.45), எக்சைட்இண்ட் (142.50), யுனைட்டெட் பேங்க் (46.20), டாட்டா குளோபல் (157.55), விஜயா பேங்க் (52.55), சென்ட்ரல்பேங்க் (74.50). இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை தவிர்க்கவும்.
 
சற்று நெகட்டிவ் டிரெண்டிற்கு மாறிய ஸ்டாக்குகள் :

(ரிவர்சலுக்கு வாட்ச் செய்யலாம்):
ஏசிசி (1380.10), என்எம்டிசி (178.15), நித்தேஷ்எஸ்ட் (15.90), எஸ்ஜேவிஎன் (26.65), கேசோராம்இண்ட் (77.70), ஆர்ச்சீஸ் (22.65), அலோக்டெக்ஸ்ட் (10.40), சம்பல்ஃபெர்டிலைசர்(52.50). இவற்றில் வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளில் வியாபாரத்தை தவிருங்கள்.

வால்யூம் நன்றாக அதிகரித்து டிரேடிங் நடந்த ஷேர்கள்

(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்)
கயாப்ராஜ் (119.10), ஐபியுஎல் ஹவுசிங்ஃபைன் (399.95), டீவி டுடே (132.95), மெக்டொவெல் (2793), ஐஐஎப்எல் (119.85), கேஇசி (118.15), உஷாமார்ட்டின் (46.50), ராடிகோ (112.20), மதர்சன் சுமி (276.20), ஹிந்த் யூனிலீவர் (561.50), எம்இஜிஹெச் (12.90), உஜாஸ் (25.20), இசட்ஈஈஎல் (273.90), எஃப்சிஇஎல் (7.70). தொடர்ந்து வாட்ச் செய்து லாங் சைடிலும் ஷார்ட் சைடிலும் டிரெண்டிற்கேற்றாற்போல் டிரேடிங் செய்யலாம்

வால்யூம் நன்றாக குறைந்து டிரேடிங் நடந்த ஷேர்கள்:

(10 நாள் மூவிங் ஆவரேஜ் அளவீட்டில்):
இந்த் ஹோட்டல் (90.05), ஹெச்டிஎஃப்சி (931.95), டிசிஎஸ் (2127.90), டாபர் (183.15), சன் பார்மா (584.30), காமன் இஃன்ப்ரா( 14.95), ஜோதி ஸ்ட்ரக் (63.70), பல்ராம்பூர் சினி (77.15), எடெல்வெய்ஸ் (52.45), ஜேஎம் ஃபைனான்சியல் (37.10), ரிலையன்ஸ் (1127.45), ஏஸ் (29.70), என்எம்டிசி (178.15), சுஸ்லான் (24.10), இன்பி (3009.55), ஐசிஐசிஐ பேங்க் (1460.80) இவற்றை வியாபாரத்திற்கு தவிர்ப்பது நல்லது.

வால்யூமும் விலையும் அதிகரித்து நடந்த ஸ்டாக்குகள்:
ஐஐஎபெல் (119.85), உஷா மார்ட்டீன் (46.50), காமான் இந்தியா(32.70), எம்இஜிஹெச் (12.90), நியோகார்ப் (15.70), டென் (194.60), கிரீன்பவர் (17.20), ஹிந்த் மோட்டார்ஸ் (13.30), ஐவிசி (20.55), வக்ரன்ஜீ (120.15), ரெயின் (48.90), நேஷனல்அலுமினியம் (58.40), பாலாஜி டெலி (58.05), சன்வாரியா (11.45), யூனிட்டி (46.30), பென்இண்ட் (38.80), ருச்சிசோயா(43.30), அலெம்பிக்லிட் (20.70). இவை வியாபர எண்ணிக்கையிலும், விலையிலும் நன்கு அதிகரித்த ஷேர்கள் இவை.

மேற்கண்ட ஸ்டாக்குகளை டிராக் செய்து டிரெண்டை அனுசரித்து லாங் சைடில் வியாபாரம் செய்யவும். வால்யூம் குறைவாக நடக்கும் ஸ்டாக்குகளை மொத்தமாகத் தவிர்க்கவும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ