Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மை ஹோம் இன்ஷூரன்ஸ் திட்டம் : பஜாஜ் அலையன்ஸ் அறிமுகம்

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் ஆல் ரிஸ்க் பாலிசியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பு அடிப்படையில் பிளாட்/அபார்ட்மெண்ட்களுக்கு காப்பீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.கட்டிடம் மற்றும் பொருட்களுக்கு நீண்ட கால அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை பாலிசி எடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.எந்த விஷயங்களுக்கு இந்த திட்டத்தில் பாலிசி எடுக்கலாம் என்றால்

 


 


1.தனிக் கட்டிடங்களுக்கு பழய நிலைக்கு கொண்டுவரும் மதிப்பு அடிப்படையில் அல்லது இழப்பு தொகை அடிப்படையில் காப்பீடு வழங்கப்படும்.

2.30 ஆண்டுகள் வரை வயதாகியிருக்கும் பிளாட்/அபார்ட்மெண்டுகளுக்கு இந்த பாலிசியில் காப்பு அளிக்கப்படும்

3. கட்டிடம் மற்ரும் அதன் உள்ளிருப்பவைகளுக்கு நீண்ட கால காப்பீடு 3 வருடம் வரை காப்பீடு வழங்கப்படும்.

4.இடைக்கால காப்பீடு வசதி குறிப்பிட்ட விகித அடிப்படையில் வழங்கப்படும்.

5.காப்புத்தொகை 5 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் உள்ளிருப்பவைகளின் பட்டியல் தர தேவையில்லை

6.நகைகள் மற்ரும் விலைமதிப்புள்ள பொருட்களுக்கு கூடுதல் பிரீமியம் செலுத்தி இந்த காப்பீட்டை பெற முடியும்

 

உதாரணமாக ஒரு பிளாட் அல்லது அபார்ட்மெண்டின் விலை 40 லட்சம் எனும்போது அதற்கு பிரீமியம் தோராயமாக 1800 ரூபாய் என்ற அளவில் இருக்கும். மேலும் இத்திட்டத்தில் பாலிசியை வாங்கும் போது குறைந்தபட்ச ஆவணங்களே தேவைப்படும் என்று பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ