Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆம்வேயின் இந்திய சிஇஓ கைது!!

அமெரிக்காவில் நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனமான ‘ஆம்வே’யின் இந்திய சிஇஓவை ஆந்திர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
 


ஆம்வே நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புகள் வாயிலாக, தவறான முறையில் பண சுழற்சி செய்து வந்ததையடுத்து, பரிசுத் தொகை சீட்டுகள் மற்றும் பண பரிவர்த்தனை (தடுப்பு) சட்டத்தின் கீழ் அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவரும், சிஇஓவுமான வில்லியம் எஸ் பிங்க்னியை ஆந்திர காவல்துறையினர் குர்கான் நகரில் கைது செய்தனர்.

இதேபோன்ற முறைகேடுகள் தொடர்பாக கடந்த ஆண்டு கேரள காவல்துறையினர் இவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ