Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.ஹெச்.எஃப்.எல்: தமிழகப் பெண்களுக்கு வீட்டுக் கடன் வட்டியில் சலுகை

இந்தியாவின் ஹவுஸிங் ஃபைனான்ஸ் துறையில் முன்னணியில் இரண்டாவது பெரும் தனியார் நிறுவனமான டி.ஹெச்.எஃப்.எல்., பெண்களை ஊக்குவிப்பதை குறிக்கோளாக கொண்டு சலுகையை அளிக்கிறது. இச்சலுகை மூலம் தமிழ்நாட்டில் தங்களது கனவு இல்லத்தை வாங்குவதற்கு முன்வரும் பெண்களுக்கு வட்டி விகிதத்தில் 0.25% தள்ளுபடியை அறிவித்திருக்கிறது.


ராகேஷ் மக்கார்
டி.ஹெச்.எஃப்.எல். நிறுவனத்தின் தலைவரும், சி.டி.ஒ.வுமான ராகேஷ் மக்கார் பேசிய போது, ” 7.21 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில், ஏறக்குறைய 16.5 லட்சம் வீடுகளுக்கு இன்னும் பற்றாக்குறையாக இருக்கிறது. இதனால் டி.ஹெச்.எஃப்.எல். நிறுவனத்திற்கு தமிழ்நாடு முக்கியமான மார்கெட்டாக திகழ்கிறது. மேலும் பெண்களுக்கு ஊக்கமளித்து, எளிதில் சொந்தமாக வீடு வாங்குவதையும் சாத்தியமாக்குவதற்காக டி.ஹெச்.எஃப்.எல் தற்போது வட்டி விகதத்தில் 0.25% தள்ளுளுபடியை அறிவித்திருக்கிறது.” என்றார்.

டி.ஹெச்.எஃப்.எல்.  தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் 27 தொடர்பு மையங்கள் மூலமாக தன்னுடைய சேவையை அளித்து வருகிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ