Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்... 10 ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு டிவிடெண்ட்!


சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் சமீபத்தில் தனது முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் வழங்கியிருக்கிறது. இது குறித்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் எம்.டி. ஹர்ஷா விஜி, ‘‘பங்குச் சந்தை நல்ல லாபகரமாக அமைந்திருப்பதால் நாங்கள் எங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட்களை வழங்குகிறோம். எங்களின் நிறுவனத்தைச் சேர்ந்த பத்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு டிவிடெண்ட்கள் வழங்கப்படுகின்றன’’  என்றார். இவரைத் தொடர்ந்து பேசிய துணைத் தலைமைச் செயல் அதிகாரி, ‘‘தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் டிவிடெண்ட்கள் ஃபண்டுகளின் சிறப்பான செயல்பாட்டை குறிக்கின்றன. இந்த டிவிடெட்டானது சிறுமுதலீட்டாளர்களுக்கு லாபமாக இருக்கும். கடந்த பத்து வாரங்களில் கொடுக்கப்பட்ட டிவிடெண்ட்களினால் 3,50,000 முதலீட்டாளர்கள் பயன் அடைந்திருக்கிறார்கள்.

டிவிடெண்ட் வழங்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்டுகள்:


மியூச்சுவல் ஃபண்டுகள்                                                                                       ரூபாய்
1. சுந்தரம் செலக்ட் மிட்கேப்                                                                                    1.00
2. சுந்தரம் ஃபைனான்ஷியல் சர்வீஸஸ் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட்    1.50
3. சுந்தரம் குரோத் ஃபண்ட்                                                                                        1.50
4. சுந்தரம் செலக்ட் மைக்ரோகேப் - சீரிஸ் 1                                                     0.50
5. சுந்தரம் செலக்ட் மைக்ரோகேப் - சீரிஸ் 2                                                     0.50
6. சுந்தரம் ரூரல் இந்தியா ஃபண்ட்                                                                         1.00
7. சுந்தரம் ஈக்விட்டி மல்டிபிளர்                                                                             1.00
8. சுந்தரம் எஸ்.எம்.ஐ.எல்.இ.                                                                                   1.00
9. சுந்தரம் டேக்ஸ் சேவர்                                                                                           0.50
10. சுந்தரம் செலக்ட் மைக்ரோ கேப்- சீரிஸ் 3                                                   0.50

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ