Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பயணத்தை முடித்துக் கொண்ட அம்பாசிடர் கார்!!

என்னதான் சொகுசு கார், அதிக மைலேஜ், நிறைய வசதிகள் கொண்ட கார் என நாம் மாறிவந்தாலும் இந்திய சாலைகளுக்கான பிரேத்யேகமான கார் என்ற அடையாளத்துடன் இந்திய சாலைகளில் கடந்த 70 ஆண்டுகளாக  வலம் வந்த அம்பாசிடர் கார் தனது பயணத்தை முடித்துக் கொண்டது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் மே 24ம் தேதியோடு அம்பாசிடர் உற்பத்தியை நிறுத்தி கொள்வதாக அறிவித்தது.
 

 


அம்பாசிடர் இந்திய சாலைகளுக்கான கார், குறைந்த விலை கார், மேலும் இந்தியாவின் அரசியல்வாதிகள்,பிரதமர், மத்திய,மாநில அமைச்சர்கள் தொடங்கி முக்கிய பிரமுகர்கள் அனைவரும் பயணம் செய்ய பயன்படுத்திய கார், வெளிநாட்டு கார்களின் வருகை, புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகள் என பல மாறுதல்கள் வந்தாலும் " அரசாங்க கார்" என்ற செல்ல பெயருடன் பல மாநில அரசு துறைகளுக்கான ஊர்தியாக இருந்தது அம்பாசிடர், பின்னர் அரசாங்கமும் சொகுசு கார்களை நோக்கி பயணிக்க அம்பாசிடர் கார்களின் வீழ்ச்சியும் தொடங்கியது.

தற்போது உற்பத்தியை நிறுத்தும் அளவுக்கு சென்றுள்ள அம்பாசிடர் கார்களின் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுபவை " குறைவான உற்பத்தி, நிதி நெருக்கடி, மார்க்கெட்டில் இந்த வகை கார்களுக்கான எதிர்பார்ப்பு குறைவு, சரியான உற்பத்தியை கையாளும் திறன் இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் வெளிநாட்டு கார் மீதான மோகம், அந்த கார்களின் விற்பனை அதிகரிப்பு போன்ற காரணங்களும் இதன் வீழ்ச்சியை நிர்ணயித்தன. மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஆலையில் இருந்துதான் அம்பாசிடர் கார் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த கார் விற்பனையை மேம்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் தோல்வி அடைந்ததாலும், மேற்கண்ட  காரணங்களாலும் வேறு வழியில்லாமல் இந்த கார் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்தியாவின் அடையாளமாகவும், உலகின் சிறந்த டாக்ஸி என்ற பெயர் பெற்ற அம்பாசிடர் தன் பயணத்தை முடித்து கொண்டாலும்,இதனை பயன்படுத்தி வந்த சிலர் இன்னமும் இந்த காரின் தனித்துவமாக கூறுவது என்னவென்றால் இந்த கார் விபத்துக்குள்ளானால் உள்ளே உள்ளவருக்கும், காருக்கும் அதிக சேதாரம் ஏற்படாத அளவிற்கு இதன் வெளிப்புறம் அதிக பலத்துடன் அமைக்கப்பட்டிருக்கும், இந்த சிறப்பம்சம் இன்று வரும் சொகுசு கார்களில் இருப்பதில்லை என்கின்றனர். இவர்கள் இன்றும் 'என்ன இருந்தாலும் அம்பாசிடர் கார் போல வருமா?, கரடு முரடான இந்திய சாலைகளை சமாளிக்க அம்பாசிடர் போன்று மற்றுமொரு கார் வருமா? என்று கூறி கொண்டுதான் இருக்கிறார்கள்.

 

ச.ஸ்ரீராம்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ