Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.ஆர்.பி மட்டும் கொடுங்கள்: கோக்

வாடிக்கையாளர்கள் கோக் தயாரிப்புகளுக்கு பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் எம்.ஆர்.பி விலையை மட்டும் கொடுத்து வாங்குங்கள் என்று கோக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிறு விற்பனையாளர்கள் ஒவ்வொரு தயாரிப்புகளுக்கும் 1 ரூபாய் முதல் இரண்டு ரூபாய் அதிகமாக விற்பனை செய்கிறார்கள். அதனால் இந்த ஆண்டு வளர்ச்சி 6 சதவிகிதமாக இருந்தது. அதனை இரட்டை இலக்க வளர்ச்சியை எட்ட கோக் எடுக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக எம்.ஆர்.பி விலைக்கு மட்டும் கோக் தயாரிப்புகளை வாங்குங்கள் என அறிவித்துள்ளது.

100 - 150 மிலி கப்களை 5 ரூபாய்க்கும், 300 மிலி பாட்டிலை 8 ரூபாய்க்கும், 750 மிலி பாட்டில்களை 35 ரூபாய்க்கும்,1.25லிட்டர் பாட்டில்களை 50 ரூபாய்க்கும் வாங்குமாறு கோக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ