Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து மேலும் ஒரு உயரதிகாரி பதவி விலகல்!

இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை பி.ஜி.ஸ்ரீநிவாஸ் திடீரென ராஜினாமா செய்திருக்கிறார். கடந்து ஜனவரி மாதத்தில்தான் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார் ஸ்ரீநிவாஸ். பதவி ஏற்றுக்கொண்ட சில மாதங்களிலேயே அவர் ராஜினாமா செய்திருப்பது .டி துறையில் மிகுந்த சலசலப்பை உருவாக்கி இருக்கிறது

.

இந்தியாவின் முன்னணி .டி. நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் சமீப காலமாக உயரதிகாரிகள் ஒருவர்பின் ஒருவராக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த ஓராண்டு காலத்தில் இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து ஒன்பது முக்கிய உயரதிகாரிகள் வெளியேறி இருக்கின்றனர். தற்போது பதவியை ராஜினாமா செய்திருக்கும் ஸ்ரீநிவாஸ் அண்மைக் காலத்தில் நிறுவனத்தை விட்டு வெளியேறும் பத்தாவது முக்கிய உயரதிகாரி ஆவார்.

கடந்த பதினைந்து ஆண்டுகளாக இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஸ்ரீநிவாஸ், கடந்த ஜனவரி மாதம்தாம் இந்த நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர்தான் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவராக வருவதற்கு வாய்ப்புள்ளவர் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் திடீரென ராஜினாமா செய்திருப்பது இன்போசிஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை அதிர்ச்சிகரமான முடிவுதான்.

ஸ்ரீநிவாஸின் பதவி விலகலுக்கு காரணம் எதுவும் இன்போசிஸ் தரப்பிலிருந்து சொல்லப்படவில்லை. பதவியை ராஜினாமா செய்த ஸ்ரீநிவாஸ் வேறு ஒர் .டி. நிறுவனத்தில் பணிக்கு சேருவாரா அல்லது சொந்தமாக புதிய நிறுவனம் ஏதும் தொடங்குவாரா என்பது இனிவரும் காலத்தில்தான் தெரிய வரும்!

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ