Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமரின் முதன்மை செயலாளராக நிருபேந்திர மிஸ்ரா நியமனம்!

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா நேற்று நியமிக்கப்பட்டார். முக்கியமான இந்த நிகழ்வு அரசு வட்டாரத்தில் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

1967ம் ஆண்டு பேட்ச் ..எஸ் அதிகாரியான மிஸ்ரா இதற்கு முன்பு மோடியுடன் பணிபுரிந்தவர் அல்ல. இதற்கு அவர் மோடியை சந்தித்ததுகூட கிடையாது. எனினும், பிரதமரின் முதன்மை செய்லாளராக யாரைத் தேர்வு செய்வது என்கிற பட்டியல் தயார் செய்யப்பட்டபோது அதில் மிஸ்ராவின் பெயர் உச்சத்தில் இருந்ததாம். கடந்த 25ம் தேதி அன்றுதான் தனக்கு இந்த தகவல் தெரிய வந்ததாக சொல்லி இருக்கிறார் மிஸ்ரா.

அரசின் திட்டங்கள் குறித்த காலத்தில் செய்து முடிக்கப்பட வேண்டும். இதற்கு அரசு இயந்திரங்களை முடுக்கிவிட வேண்டும்என பிரதமர் மோடி எதிர்பார்ப்பதாக சொல்லி இருக்கிறார் மிஸ்ரா. பிரதமர் மோடியின் உடனடியாக செய்ய வேண்டிய 10 முக்கிய திட்டங்கள் பற்றி கூடிய விரைவில் அவரே அறிவிப்பார் எனவும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ