Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜி.எஸ்.டி. வரி விரைவில் நடைமுறைக்கு வரும்! நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தீவிரம்!

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள அருண் ஜெட்லி குட்ஸ் அண்ட் சர்வீஸ் டாக்ஸை கூடிய விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கும்படி கேட்டுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வரி தொடர்பாக மாநில அளவில் நிதி அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தவும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.

ஜி.எஸ்.டி. வரியானது கடந்த 2010ம் ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல மாற்றங்களைக் கோரிவந்ததன் விளைவாக, இந்த வரி மசோதாவானது நாடாளுமன்றத்தில் நிறைவேறாமலேயே இருக்கிறது.

இந்த மசோதா ஏற்கெனவே தயார் நிலையில்தான் இருக்கிறது. மோடி தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த மசோதாவில் பெரிய மாற்றம் ஏதும் செய்யவில்லை எனில், இதை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் பெரிய பிரச்னை ஏதும் இருக்காது என நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைக்கு கொண்டு வருவோம் என பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தது குறிப்பிடத் தக்கது!

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ