Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மின் வெட்டு இல்லை!தமிழக அரசின் அறிவிப்பால் தொழில் துறை நிறுவனங்கள் மகிழ்ச்சி!

வருகிற ஜுன் 1ம் தேதி முதல் தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என்கிற அறிவிப்பால் தமிழகத்தில் உள்ள தொழில் துறை நிறுவனங்கள் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளன.

‘‘உயர் மின் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறவர்களுக்கு அரசின் இந்த அறிவிப்பு உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக மின் தட்டுப்பாட்டினால் மிகுந்த இன்னலை சந்தித்து வந்தன. அரசின் இந்த முடிவினால் தமிழகத்தில் இனி பொருளாதார வளர்ச்சி மேம்படும்’’ என்று சொல்லி இருக்கிறார் தமிழக மின்பயன்பாட்டாளர்களின் சங்கத் தலைவர் டி.பாலசுந்தரம்.

அரசின் இந்த முடிவால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று சொல்லி இருக்கிறார் இந்திய சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரியின் கோவைப் பிரிவின் தலைவர் ஆர்.ஆர்.பாலசுந்தரம்.

அரசின் இந்த முடிவு ஜவுளித் துறையில் கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும். இதனால் இந்தத் துறையின் செயல்பாடு அதிகரிக்கும் என்று சொல்லி இருக்கிறார் தென் இந்திய மில் அசோசியேஷனின் தலைவர் டி.ராஜ்குமார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ