Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த பங்குச் சந்தைகள்!

இன்றைய நாள் முடிவில்:

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 321 புள்ளிகள் குறைந்து  24234 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 94 புள்ளிகள் குறைந்து 7235 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 59.05 என்ற நிலையில்  உள்ளது.
 

 

12 மணி நிலவரப்படி

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 138 புள்ளிகள் குறைந்து  24417 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 32 புள்ளிகள் குறைந்து 7297 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 58.83 என்ற நிலையில்  உள்ளது.

காலை துவக்க நிலவரம்:

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(29.05.2014) இறக்கத்தில் துவங்கியது. மே மாதம் எஃப் அண்டு ஓ எக்ஸ்பைரி முடிவதாலும்,அதிகமான ப்ராபிட் புக்கிங் செய்வதாலும் சந்தை இறக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.  மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 130 புள்ளிகள் குறைந்து  24425 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 29 புள்ளிகள் குறைந்து 7300 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. 

 


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 58.85 என்ற நிலையில்  உள்ளது. உலக சந்தையில் தங்கத்தின் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. 24 கேரட் 10கிராம் தங்கத்தின் விலை 26,697 என்ற நிலையிலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 39,986 என்ற விலையிலும் வர்த்தகமாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ