Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நரேந்திர மோடி அரசின் முதல் 10 வேலைகள்!!

நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றவுடன் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திருப்பும் நோக்கில் 10 அம்ச திட்டத்தை புதிய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பாராளுமன்ற விவகார மந்திரி வெங்கைய்யா நாயுடு கூறுகையில் அனைத்து அமைச்சர்களும் தங்களுக்கான முதல் 100 நாட்களில் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து அட்டவணையிட்டு செயல்படவேண்டும் என தெரிவித்துள்ளார். அரசின் டாப் 10 திட்டங்கள் பின்வருமாறு:
 


1.அரசு பணித்துறையின் நம்பிக்கையை அதிகரிப்பது.

2.புதுமையான கருத்துக்களுக்கு வரவேற்பு மற்றும் அதிகாரிகள்  வேலை செய்ய முழு சுதந்திரம் வழங்கப்படும்.

3.கல்வி, சுகாதாரம், தண்ணீர், எரிசக்தி மற்றும் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

4.அரசாங்கத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும். இ-ஏலம், ஒப்பந்தப்புள்ளி மற்றும் பிற அரசாங்க வேலை ஊக்குவிக்கப்படும்.

5.அமைச்சகங்களுக்கு இடையேயான சிக்கல்கள் கையாளும் வகையில் அமைப்பு உருவாக்கப்படும்.

6.மக்கள் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க அரசு இயந்திரங்கள் அமைக்கப்படும்.

7.பொருளாதாரம் சிக்கல்கள் அடையாளம் காணப்படும்.

8.உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும்

9.புதிய கொள்கைகளும் திட்டங்களும் குறிப்பிட்ட நேரக்கெடுவில் நிறைவேற்றப்படும்.

10.அரசாங்க கொள்கையில் உறுதிப்பாடு மற்றும் நிலைத்தன்மை அதிகரிக்கப்படும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ