Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்!!

நாள் முடிவில்

ஏற்றத்தில் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய நாள் முடிவில் சரிவோடு முடிந்தன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 16 புள்ளிகள் சரிந்து  24217 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 5 புள்ளிகள் அதிகரித்து 7229 என்ற நிலையிலும் முடிவுற்றன.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.10 ரூபாயாக உள்ளது

 

 

3 மணி நிலவரப்படி

ஏற்றத்தில் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் சரிவோடு வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிந்து  24195 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 12 புள்ளிகள் அதிகரித்து 7222 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.05 ரூபாயாக உள்ளது

 

 

 

12 மணி நிலவரப்படி

இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 37 புள்ளிகள் அதிகரித்து  24271என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 11 புள்ளிகள் அதிகரித்து 7247 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.

 

காலை துவக்க நிலவரம்

சரிவிலேயே இருந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று (30.05.2014) காலை 10 மணி நிலவரப்படி ஏற்றத்தோடு தொடங்கின. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 65 புள்ளிகள் அதிகரித்து  24299 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 16 புள்ளிகள் அதிகரித்து 7252 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.

 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 58.95 என்ற நிலையில் உள்ளது. குறிப்பாக ஜின்டால்,ஏர்டெல் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ