Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்புப் பணத்தை மீட்க குழு!

வெளிநாட்டிலிருந்து கறுப்புப் பணத்தை மீட்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.வி.ஷா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.  அரிஜித் பசாயத் குழுவின் துணைத் தலைவராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையின் முதல் முடிவை விளக்க அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேட்டியளித்தார்.

ரிசர்வ் வங்கி, வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகளும் குழுவில் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. சிபிஐ மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகளும் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றுள்ளதாக  ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ