Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐந்து ரூபாயில் பெங்களூரு - கோவா : ஏர் ஏசியா அறிவிப்பு

உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்கும் விதமாக ஏர் ஏசியா நிறுவனம் பெங்களூரு - கோவா இடையே குறைந்த விலையில் விமான சேவையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக விளம்பரத்திற்காக அடிப்படை விலையாக ரூ.5 க்கு விமான சேவையை அறிவித்துள்ளது.

 



 

அனைத்து சேவைகட்டணங்களும் சேர்த்து 490 ரூபாய் தொடங்கி 990 ரூபாய்க்குள் பெங்களூரிலிருந்து கோவாவிற்கு பறக்கலாம் என ஏர் ஏசியா அறிவித்துள்ளது.முதல் 15000 சீட்டுகளுக்கு இந்த ஐந்து ரூபாய் அடிப்படை கட்டணம் செல்லும் என ஏர் ஏசியா கூறியுள்ளது



 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ