Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிறுத்தி வைக்கபட்டுள்ள 50 சாலை திட்டங்களுக்கு வேகம்:. நிதின்கட்கரி அறிவிப்பு

இந்தியா முழுக்க 50க்கும் மேற்பட்ட சாலைத் திட்டங்கள் முடங்கியுள்ளன. இந்தத் திட்டங்களை புதிய அரசு மறுசீரமைத்து வேகமாக முடிக்கும் என சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர்  நிதின் கட்கரி அறிவித்துள்ளார். அதாவது அனைத்து நெடுஞ்சாலை திட்டங்களிலும் சாலை கட்டணங்களில் புதிய கொள்கைகளை உருவாக்குவது, டென்டர் நடைமுறைகளை ஆன்லைனில் கொண்டு வருவது ஆகியவற்றை  திட்டமிட்டுள்ளோம் என்றார்.

 



கோப்புகளில் கையெழுத்திடுவதில் ஏற்படும் தாமதத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது. கட்டுமானம் மற்றும் பரமாரிப்பு செலவுகளையும், தார் மற்றும் காங்கீரிட் சாலை ஒப்பீட வேண்டும். அதன் பிறகு எந்த விதமான சாலைகள் அமைக்கலாம் என்பது செலவுகளில் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில்  வாகனங்களின் எண்ணிக்கையும் குறைக்க வேண்டும். அதே நேரத்தில்  எத்தனால் பயன்படுத்தப்படும் வாகன  தயாரிப்புகளை  ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ