Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.டி.சி.: பழச்சாறு சந்தையில் நுழைகிறது.

ஐ.டி.சி. நிறுவனம் ஜூஸ் மேக்கர் பி நேச்சுரல் பிராண்ட் -ஐ 100 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. சிகரெட் அல்லாத எஃப்.எம்.சி.ஜி பிரிவின் மூலமாக 2018ம் நிதியாண்டுக்குள் டேனோவரை 15,000 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதை அடைய 114% வளர்ச்சி அடைய வேண்டும்.
 

புதிய அரசு சிகரெட் போன்ற பொருட்களுக்கு அதிக வரி உயர்த்தும் என கருத்து நிலவுகிறது. இந்த வரி அதிகரிப்பால் ஐடிசி நிறுவனத்தின் நிதி நிலைமை பாதிக்காமல் இருக்க இந்த நிறுவனம் புதிய வணிகத்தில் களமிறங்குகிறது.

ஐ.டி.சி. நிறுவனத்தின் சிகரெட் பிரிவின் லாபம், கடந்த மூன்றாண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது. அதாவது 2011ல் 4,938 கோடி ரூபாயாக இருந்த லாபம் 2014ல் 10,261 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ