Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜூன் 3 -ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை

- சீனிவாசன் ரங்கராஜ், சீனியர் டீலர், ஐ.எஃப்ஐஎன்

பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகரித்ததினால் தொடர்ந்து இரண்டு மாதங்களாக இந்திய வருடாந்திர நுகர்வோர் (Indian annual consumer prices ) விலைகளின் குறியீடு மார்ச் மாதத்தின் 8.31 சதவிகிதத்லிருந்து உயர்ந்து மூன்று மாத கால உச்சமான 8.59 ஏப்ரல் மாதத்தில் தொட்டது.

ஆனால் உணவு மற்றும் எரிபொருள் விலை குறைந்ததின் விளைவாக மொத்த விலை குறியீடு( Wholesale Price Index (WPI)) மார்ச் மாதத்தின் 5.7 சதவிகிதத்லிருந்து ஏப்ரல் மாதத்தில் 5.2 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.

எப்படியிருந்தாலும் இவை இரண்டும் ரிசர்வ் வங்கியின் கண்ணோட்டத்தில் உயர்ந்து தான் காணப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் பணவீக்கம் குறைக்க இலக்கு இந்த ஆண்டில் 8 சதவீதமும் அடுத்த வருடத்தில் 6 சதவிகிதமாக இருக்கிறது என்று சமிபத்தில் கூறினார் .

ஆனால் இந்தியாவின் தொழிற் குறியீடு ( IIP) மார்ச் மாதத்தில் -1.66 சதவீதம் என்று எதிர்பார்த்ததை விட -0.5 சதவீதமும் குறைந்திருக்கிறது. இது பிப்ரவரி மாதத்தில் -1.9 இருந்தது.

 

ரிசர்வ் வங்கியிக்கு தொழிற் வளர்ச்சியையும் உயர்த்த வேண்டிய கடமை இருக்கிறது.

மேலும் புதிய அரசாங்கம் நாட்டில் தொழிற் வளர்ச்சியை உயர்த்தி அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க ஆர்வமாக இருப்பதால் ரிசர்வ் வங்கியும் அதனை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கபடுகிறது .

அதனால் ஜூன் 3 ல் றிவிக்க இருக்கும் கடன் கொள்கையில் வட்டி விகிதமும் ரொக்க இருப்பு விகிதமும் மேலும் உயர்த்தாமல் அதே நிலையில் விட்டு விடலாம் அல்லது குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ