Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமரின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு குவியும் லைக்குகள்!!

புதிய பிரதமரின் அலுவலக ஃபேஸ்புக் கணக்கிற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆரம்பிக்கப்பட்ட நான்கு நாட்களில் 11 லட்சம் லைக்குகளை தாண்டியுள்ளது பிரதமரின் ஃபேஸ்புக் பக்கம். ஏற்கனவே இந்த தேர்தலில் ஃபேஸ்புக், ட்விட்டரில் கலக்கிய பிரதமர் மோடி, தற்போது தனது அலுவலக ஃபேஸ்புக் கணக்கிலும் ஹிட் அடித்துள்ளார்.



 

இந்த பக்கத்தில் பிரதமரின் முக்கிய அறிவிப்புகளும், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் பதிவு செய்யப்படும்.ஏற்கனவே மன்மோகன் சிங் பயன்படுத்தி வந்த இந்த பக்கம் மீண்டும் ரீ செட் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்ட இந்த பக்கம் நான்கு நாட்களில் 11 லட்சத்தை தாண்டியது குறிப்பிடத்தக்கது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ