Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் 29வது மாநிலம்!!

நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா இன்று உதயமானது. இதற்காக 1969 ஆம் ஆண்டு தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை அப்பகுதி மக்களால் எழுப்பப்பட்டது. இதற்கு ராயலசீமா பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



அதன்பின் தனித் தெலங்கானா கோரிக்கை விஸ்வரூபமெடுத்து, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தனி தெலங்கானா மாநிலம் அமைப்பதாக உறுதியளித்தது அப்போதைய காங்கிரஸ் அரசு.அது தொடர்பாக ஆராய கிருஷ்ணா கமிட்டியை அமைத்தது. பின்னர் தெலங்கானா மாநிலம் அமைக்க, மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது.

இதை தொடர்ந்து, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைத்து நடத்தப்பட்ட சட்டமன்றத் தேர்தலில், தெலங்கானா பகுதியில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி  வெற்றி பெற்றது.இந்நிலையில், நாட்டின் 29வது மாநிலமாக தெலங்கானா இன்று உதயமானது. தெலங்கானா மாநிலத்தின் முதல் முதலமைச்சராக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ் இன்று காலை 8.15 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார்.

தெலங்கானாவின் முதல்வராக சந்திரசேகர ராவ் பதவி ஏற்றதை அடுத்து அங்கு அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், சீமாந்திரா பகுதியில் குடியரசுத் தலைவர் ஆட்சி தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ