Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்பிஐ: எஸ்எல்ஆர் 0.5% குறைப்பு

ஆர்பிஐ இன்று வெளியிட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில், வங்கிகளுக்கான எஸ்எல்ஆர்., விகிதத்தை ( வங்கிகள், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது )0.5%  குறைத்துள்ளது. அதாவது 23% லிருந்து 22.50% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகளுக்கு கடன் வழங்க அதிக தொகை கிடைக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்.



அதே நேரத்தில் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் எதையும் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்  அறிவிக்கவில்லை.

ரெப்போ ரேட் 8% ஆகவும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 7% ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, ரொக்க இருப்பு விகிதமும் 4% என்ற அளவிலேயே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ