Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்க விலை குறைகிறது!

தங்கத்தின் மீதான இறக்குமதி மதிப்பை மத்திய அரசு குறைத்துள்ளது. அதாவது 10 கிராம் (24 கேரட்) தங்கத்தின் மீதான மதிப்பை 650 டாலரிலிருந்து 617 டாலராக குறைத்துள்ளது. மேலும் வெள்ளியின் மீதான இறக்குமதி மதிப்பும் குறைக்கப்பட்டுள்ளது.
 
அதாவது ஒரு கிலோவிற்கு  412 டாலரில் இருந்து 408 டாலராக குறைத்துள்ளது.  இதனால், வெள்ளி மற்றும் தங்கத்தின் விலை இந்தியாவில் இறங்கும் என  கலால் மற்றும் சுரங்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.இறக்குமதி வரி மதிப்பை தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒரு முறை கலால் மற்றும் சுங்கத் துறை மாற்றியமைக்கும்.

தங்கத்தின் விலை பத்து கிராம் (24 கேரட்)  தங்கத்தின் விலை ரூ. 21,920  என உள்ளது. ஒரு கிராம் (22 கேரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ. 2562 என உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ