Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப்ரைட் நிறுவனத்தை வாங்குகிறது ஃபேஸ்புக்!

சமீபகாலமாக உடனடி தகவல் ஆப்ஸ் நிறுவனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வரும் சமூக வலைதள நிறுவனமான ஃபேஸ்புக் தற்போது கம்பியில்லா இன்டர்நெட் சேவையை அளிக்கும் ஆப்ஸை வழங்கும் ப்ரைட் நிறுவனத்தை வாங்க இருக்கிறது. எவ்வளவு தொகை கொடுத்து வாங்கவுள்ளது என்பது குறித்த தகவலை இன்னும் ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிடவில்லை.
 


மேலும் இந்த நிறுவனத்தில் 30க்கும் குறைவான பணியாளர்களே உள்ளனர்.அவர்கள் ஃபேஸ்புக் நிறுவனத்தோடு இணைவார்களா என்பது குறித்த தகவல்கள் கிடைக்காத நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்டர்நெட் வசதி இல்லாத ஊரில் இருப்பவர்களையும் இன்டர்நெட் மற்றும் சமூக வலைதளங்களில் இணைக்கும் நோக்கில் தான் அதிக வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை அளிக்கும் இந்நிறுவனத்தை வாங்க முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வாட்ஸ் அப், அகுலஸ் போன்ற நிறுவனங்களை ஃபேஸ்புக் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ