Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்பிஐ நிதிக் கொள்ளகையில் மாற்றம்!

இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லும் உச்ச வரம்பை ஆர்பிஐ அதிகரித்துள்ளது.
இதன்படி வெளிநாடுகளுக்கு இந்தியர்கள் எடுத்து செல்லும் தொகை இதுவரை 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக இருந்தது. அது 1.25 லட்சம் டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் நிலையான நிலை ஏற்பட்டதை அடுத்து இந்த மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக ரிசர்வ வங்கி தெரிவித்துள்ளது.

 


 


ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பில் உறுதியற்ற தன்மை காரணமாக 2 லட்சம் டாலராக இருந்த உச்ச வரம்பு  75 ஆயிரம் டாலராக
குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொகையை இந்தியர்கள் பங்குகள், ஃபண்ட்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஆனால் லாட்டரி மற்றும் மார்ஜின் டிரேடிங் உள்ளிட்டவைகளில் முதலீடு செய்ய உள்ள தடை  என்கிற கட்டுப்பாடுகளில் மாற்றமில்லை.

மேலும் இந்தியர்கள்   இந்தியாவிலிருந்து செல்லும்போது இந்திய ரூபாயாக ரூ. 25 ஆயிரம் வரை எடுத்துச் செல்லலாம் என்றும்
அறிவித்துள்ளது. தற்போது வெளி நாட்டினர் இந்திய ரூபாயாக எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
அதுபோல வெளி நாட்டுக்குச் செல்லும் இந்தியர்கள் ரூ. 10 ஆயிரம் வரை கையில் ரொக்கமாக எடுத்துச்
செல்லலாம் என்பதை தற்போது 25 ஆயிரமாக உயர்த்தியுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ