Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரிப்பு

ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள் அளவில் இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனையின் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளதாக இன்டர்நேஷ்னல் டேட்டா கார்ப்பரேஷன் என்கிற அமைப்பு தெரிவித்துள்ளது. இது 
தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த வளர்ச்சி  186 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக 
குறிப்பிட்டுள்ளது. 
 
 
குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையில் அதிகரித்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட 
மூன்றாம் கட்ட நகரங்களில் இந்த வகை ஸ்மார்ட் போன்கள் ஆதிக்கம் நிறைந்துள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் ஆய்வு சொல்கிறது.
  
மேலும் ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் மொபைல் போன்களின் விற்பனை ஆண்டுக்காண்டு 1 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது அந்த நிறுவனம் இந்திய மொபல் சந்தையை எந்த நிறுவனம் எவ்வளவு பிரித்துக் கொண்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளது. அதன் படி இந்திய சந்தையை பகிர்ந்து 
கொண்டுள்ள மொபைல் நிறுவனங்களின் விவரம் 
சாம்சங் : 35 % , மைக்ரோமேக்ஸ் : 15% , கார்பன்: 10, லாவா: 6, நோக்கியா: 4, இதரவை: 30.
 
ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகப்பது நல்ல விஷயம்தானே...
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ