Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் புதிய உச்சம்!! ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்

ஏற்றத்தில் முடிவடைந்த பங்குச் சந்தைகள்!


இந்திய பங்குச் சந்தைகள் இன்று(09.06.2014) ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன.  மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 183 புள்ளிகள் உயர்ந்து 25580 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 71 புள்ளிகள் அதிகரித்து 7654 என்ற நிலையிலும் சந்தை முடிவடைந்தது. 


கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஏ.சி.சி, பவர் கிரீட் கார்ப்ரேஷன் பங்குகள் விலை உயர்ந்தும், ஒ.என்.ஜி.சி, பி.பி.சி.எல், எஸ்.பி.ஐ., இன்ஃபோசிஸ்  ஆகிய பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகம்  ஆனது.  ஆக இன்று சென்செக்ஸ் ஒரு சதவிகித ஏற்றத்தில் முடிவடைந்தது. 


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பானது 59.19 என்ற நிலையில் வர்த்தகமானது. 
22 காரட் ஆபரணட தங்கத்தின்  ஒரு கிராம் விலையானது 2536 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளியானது 40770  ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.

காலை நிலவரப்படி:

  இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்தோடு தொடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி வர்த்தகம் ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 162 புள்ளிகள் அதிகரித்து 25558.54 என்ற அளவில் புதிய உச்சத்தை எட்டியது. மேலும் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 54 பள்ளிகள் அதிகரித்து 7638 என்ற அளவில் வர்த்த்கமாகி வருகிறது.

 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.04 ரூபாயாக உள்லது. குறிப்பாக அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி நிறுவன பங்குகள் 4 சதவிகிதம் அதிகரித்தும், ஓ.என்.ஜி.சி மற்றும் எம் அண்டு எம் நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் காணப்படுகின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP