Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் சிறந்த தொழில் முனைவோர் விருது பெறும் இந்தியர்!!

உலகின் மிகச்சிறந்த தொழிலதிபராக கோட்டக் மஹிந்த்ரா வங்கியின் மேலாண்மை இயக்குநர் உதய் கோட்டாக்கை அறிவித்துள்ளது எர்ன்ஸ்ட் அண்ட் யங் அமைப்பு. ஆண்டுதோறும் இந்த விருதை சொந்த நாட்டில் சிறப்பாக தொழில் செய்யும் ஒரு தொழில்முனைவோருக்கு வழங்கிவருகிறது. 

1985ம் ஆண்டு நிதி நிறுவனமாக தொடங்கப்பட்ட கோட்டக் நிறுவனம் 2003ம் ஆண்டு வங்கியாக மாறிய முதல் நிதி நிறுவனம் என்ற பெயரை பெற்றது. தற்போது 354 இடங்களில் 605 கிளைகளோடு 25000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கி வருகிறது கோட்டக் நிறுவனம் அதனால் உதய் கோட்டக்கிற்கு இந்த விருது வழங்கப்படுவதாக இ.ஒய் அறிவித்துள்ளது.

இந்த வருடம் இந்த விருதை பெறுவதன் மூலம் உதய் கோட்டக், இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்திக்குபின் இந்த விருதை பெறும் இரண்டாவது இந்தியர் என்ற மதிப்பை பெறுகிறார்.இதற்கு முன் இதே விருதை நாராயணமூர்த்தி 2003ம் ஆண்டு பெற்றிருந்தது குறிப்படத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ