Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருடத்திற்கு எத்தனை சிலிண்டர் : மத்திய அரசின் புதிய முடிவு

 மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் எண்ணிக்கையை  குறைப்பதற்கான முயற்சிகளை பெட்ரேலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.  அதாவது ஒரு குடும்பத்துக்கு  மானியவிலையில் வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் வழங்கபட்டுவருகிறது.

 

மானிய சுமையை குறைப்பதற்காக  சிலிண்டர் எண்ணிக்கையை 6 ஆக குறைக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக 9 சிலிண்டர் என குறைத்து, இரண்டாவது கட்டமாக அதை 6  சிலிண்டர் என குறைக்கவும் திட்டமிட்டமிடப்பட்டு வருகிறது மத்திய அமைச்சகம்.

மேலும் சராசரியாக ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு  6 - 7 சிலிண்டர்தான் தேவைப்படும் ஆய்வுகள் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. சமையல் எரிவாயு மானியத்திற்காக  2012 - 13 நிதியாண்டில் சுமார் 39,558 கோடி ரூபாயும், 2013 - 14 நிதியாண்டில்  46,458 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ