Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இன்ஃபோசிஸின் புதிய சிஇஓ : விஷால் சிக்கா!

தற்போது இன்ஃபோசிஸ் சிஇஓவாக இருக்கும் சிபுலாலுக்கு பதில் புதிய சிஇஓவாக விஷால் சிக்கா வரும் ஆகஸ்ட் 1ம் தேதி பதிவியேற்பார் என இன்ஃபோசிஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

புதிய சிஇஓவாக நியமிக்கப்படவிருக்கும் விஷால் சிக்கா ஏற்கனவே சாப் நிறுவனத்தின் குழு உறுப்பினர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாப் நிறுவனத்தில் மொபைல், அனலட்டிக்ஸ், மற்றும் க்லவுட் கம்ப்யூட்டிங் பிரிவுகளில் முக்கிய மாற்றங்களுக்கு காரணமானவர் விஷால் சிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற மாதம் சில சொந்த காரணங்களுக்காக சாப் நிறுவனத்திலிருந்து விஷால் சிக்கா ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி இன்ஃபோசிஸின் பல முக்கிய தலைவர்களின் பதவிகளிலும் மற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது என இன்ஃபோசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close