Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்ஃபோசிஸிலிருந்து நாராயணமூர்த்தி மகன் நீக்கம்!

இன்ஃபோசிஸின் செயல் தலைவரும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் மகனுமான
ரோஹன் மூர்த்தி இன்ஃபோசிஸின் செயல் தலைவர் பதவியிலிருந்து வரும் ஜூன் 14ம் தேதி பதவிவிலகுவார் என இன்ஃபோசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி நிர்வாகத்திலும் பல மாறுதல்களை கொண்டுவந்துள்ளது இன்ஃபோசிஸ் நிர்வாகம்.
 
செயல் தலைவராக இருந்த நாராயணமூர்த்தி தற்போது நிர்வாகம் சாராத தலைவராகவும் மற்றும் துணை செயல் தலைவராக இருந்த கோபாலகிருஷ்ணன் தற்போது நிர்வாகம் சாராத துணை  தலைவராகவும் நீடிப்பார்கள் என்றும். அக்டோபர் 11 முதல் காம்நாத்  நிர்வாகம் சாராத துணை தலைவராக பதயேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே சிஇஓவாக இருந்த சிபுலால், இயக்குநராக இருந்த ஸ்ரீநாத் பட்னி, நாராயனமூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி ஆகியோர் நிர்வாகத்திலிருந்து  விலக்கப்பட்டுள்ளனர். இன்ஃபோசிஸில் முக்கிய தலைவர்கள் பதவி விலகலின் எதிரொலியாக இந்த மாற்றங்கள் நடைபெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ