Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி.எஃப். பிடித்தம்: வரம்பு உயர்வு?

ஊழியர்களின் சம்பளத்தில் ரூ. 6500 என்கிற கணக்கில் பல நிறுவனங்கள் 12% தொகையை பி எஃப் ஆக   பிடித்தம் செய்து வருகின்றன. இந்த வரம்பை 15000 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  காங்கிரஸ் ஆட்சியிலே .பி.எஃப் பிடிப்பதற்கான குறைந்தபட்ச தொகையை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்குவதாக இருந்தது. ஆனால் தேர்தல் காரணமாக  ஒத்திவைக்கப்பட்டது.
 
தற்போது அமைந்திருக்கும் நரேந்திரமோடி அரசு இதற்கு ஒப்புதல் வழங்கும் என தகவல்  வெளிவந்துக் கொண்டிருக்கிறது.  மேலும் பி.எஃப். அமைப்பின் கீழ் நாடு முழுவதும் 8 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சம்பளத்தில் பிடித்த செய்யப்படும் பி.எஃப்  தொகையை உயர்த்தும் போது ஒய்வுக் காலத்திற்கான சேமிப்பு அதிகரிக்கும்.
 
ஒருவர் அவரின் அடிப்படை சம்பளத்தில் அதிகபட்சமாக சம்பளத்தில் 24 சதவிகிதம் பி.எஃப். யாக செலுத்தலாம். 
 
கடந்த பிப்ரவரி மாதம், பி.எஃப் பென்ஷன் குறைந்தபட்சம் மாதம் ஆயிரம் ரூபாய்  வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
  

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ