Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யு.பி.எஸ்.சி தேர்வு முடிவு வெளியீடு: தமிழக அளவில் தேனி வாலிபர் முதலிடம்!

 மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் (யுபிஎஸ்சி) 2013ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அளவில் தேனியை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.

 
2013ஆம் ஆண்டு நடைபெற்ற யு.பி.எஸ்.சி தேர்வை சுமார் 12 ஆயிரம் பேர் எழுதியிருந்தனர். இவர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றிருந்தனர்.இந்நிலையில், தேர்வு முடிவை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதில், 1,122 பேர் தேர்வாகியுள்ளனர்.
 
இந்த தேர்வில் அகில இந்திய அளவில் கவுரவ் அகர்வால் என்பவர் முதலிடம்  பிடித்துள்ளார். தமிழக அளவில் தேனியை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 45வது இடத்தை பிடித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close