Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் தோனி!!

உலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப் 100 வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி 22வது இடத்தை பிடித்துள்ளார். வீரர்களின் கடந்த ஒரு வருட சம்பளம் மற்றும் விளம்பரம் மூலம் அவர்கள் பெறும் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசை கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையின் படி  தோனி போட்டிகளுக்கான கட்டணம் மற்றும் சம்பளம் மூலமாக 4 மில்லியன் டாலரையும், விளம்பரங்கள் மூலமாக 26 மில்லியன் டாலரையும் சேர்த்து ஒரு ஆண்டுக்கு 30 மில்லியன் டாலர் வருமானமாக பெறுகிறார்.

இந்த பட்டியலில் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான மேவெதர் 100 மில்லியன் டாலருக்கு மேல் வருமானத்துடன் முதலிடம் பிடித்துள்ளார்.போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ 2வது இடத்தையும், சுவிஸர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஏழாவது இடத்தையும், ஸ்பெயின் டென்னிஸ் வீரர் நடால் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலில் மரியா ஷரபோவா, செரினா வில்லியம்ஸ் போன்ற முன்னனி வீரர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close