Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

யுனினாரை முழுமையாக வாங்குகிறது டெலினார்!!

நார்வேயின் தொலைதொடர்பு நிறுவனமான டெலினார் ஏற்கனவே இந்தியாவில் யுனினார் நிறுவனத்தில் 74 சதவிகித பங்குகளை வைத்திருக்கிறது. மீதமுள்ள 26 சதவிகித பங்குகளை லட்சத்தீவை சேர்ந்த முதலீட்டாளர்கள் வைத்திருந்தனர்.

இந்நிலையில் டெலினார் நிறுவனம் இந்திய அரசின் கீழ் இயங்கும் ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் ப்ரமோஷன் போர்டை அணுகி மீதமுள்ள 26 சதவிகித பங்குகளையும் அதன் மதிப்பான 780 கோடி ரூபாயை அளித்து வாங்க கோரிக்கை விடுத்துள்ளதாக டெலினார் நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது ஆந்த்ரா, பீகார், குஜராத், மஹாராஷ்ட்ரா, உத்திர பிரதேசம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் யுனினாருக்கு 30 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும் இந்தியாவில் வாடிக்கையாளர் ரீதியாகவும், வருவாய் ரீதியாகவும் நான்காவது மிகப்பெரிய மொபைல் ஆப்பரேட்டர் யுனினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ