Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டீமேட் கணக்கு?

முன்னாடியெல்லாம் ஒரு கம்பெனியோட ஷேரை வாங்கினா, பளபளப்பான பேப்பர்ல ஷேர் சர்டிஃபிகேட்  கொடுப்பாங்க. இப்போ காலம் மாறிடுச்சில்லையா... அதுக்குத் தகுந்தமாதிரி, நீங்க வாங்குகிற ஷேர்களை உங்கள் பெயரில் இருக்கிற ஒரு எலெக்ட்ரானிக் கணக்கில்ல வரவு வைப்பாங்க.

இதுக்குப் பேர்தான் டீமேட் கணக்கு (Dematerialisation Account) பேங்க்ல பணம் போட்டு எடுக்கிற மாதிரிதான் இதுவும். இதுல பணத்துக்குப் பதிலாக பங்கு.. அவ்வளவுதான்..!

டீமேட் கணக்கு ஆரம்பிப்பது எப்படி?

பங்குகளை வாங்குவதையும் விற்பதையும் ஷேர் புரோக்கிங் நிறுவனங்கள் மூலம்தான் செய்யமுடியும். அவர்களிடமே இந்த டீமேட் கணக்கு ஆரம்பித்துக் கொள்ளமுடியும். பெரும்பாலான வங்கிகளிலும் இந்த வசதி வந்துவிட்டது. உதாரணத்துக்கு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி.. இவைகள்ல டீமேட் அக்கவுன்ட் ஆரம்பிச்சுக்கலாம். நமக்கு டீமேட் தொடங்கிக் கொடுக்குற இவர்களை ‘டெபாசிட்டரி பார்ட்டிசிபன்ட் (டி.பி.)’ அப்படின்னு சொல்வாங்க. பக்கத்துல இருக்குற டி.பி-.கிட்டயே இந்தக் கணக்கை ஆரம்பிச்சுக்குறது நல்லது. இதுக்கு 350&லிருந்து 500 ரூபாய் வரை கட்டணம் வரும். இது நிறுனங்களுக்கிடையே வேறுபடும். மேலும், டீமேட் கணக்கைப் பராமரிக்க வருடாந்திரக் கட்டணம் உண்டு.

டீமேட் கணக்கு ஆரம்பிக்க, வருமான வரித் துறை வழங்குற பான் கார்டு எண், போட்டோ ஒட்டிய அடையாள அட்டை... அதாவது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், இதுமாதிரி ஏதாவது, அப்புறம் இருப்பிடச் சான்றிதழ் இதெல்லாம் தேவைப்படும்.

ஒருவாரம், பத்து நாள்லயே டீமேட் கணக்கை ஆரம்பிச்சுடலாம். கணக்கு ஆரம்பிச்சதும் உங்களுக்குன்னு ஒரு நம்பர் அனுப்புவாங்க. அதுதான் டீமேட் அக்கவுன்ட் நம்பர். நீங்க பங்கு வாங்கும்போதும், விற்கும்போதும் இதைத்தான் குறிப்பிடணும். ஒருவரே எத்தனை டீமேட் அக்கவுன்ட் வேணும்னாலும் வைத்துக் கொள்ளலாம். . ஆனா, அதனால ஒரு புண்ணியமும் கிடையாது. வெட்டிச் செலவுதான். அதனால, ஒரு ஆளுக்கு ஒரு டீமேட் அக்கவுன்டே போதும்.

(நாணயம் விகடன் எல்.கே.ஜி. இணைப்பு புத்தகத்தில் இருந்து)
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ