Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு சினிமாத்துறைக்கு தேவை!!

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான கமலஹாசன் சினிமாத்துறையில் புதிய தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

ஒரு ஆண்டில் வெறும் 30 சதவிகித படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. மீதமுள்ள 70 சதவிகித படங்கள் முதலீடு, விநியோகஸ்தம் போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றன.

இதனை சரிசெய்ய சினிமாத்துறையில் முதலீடு செய்ய தைரியமான பெரு நிறுவனங்கள் முன்வர வேண்டும், அவர்களின் தேவை சினிமாத்துறைக்கு அதிகம் தேவைப்படுகிறது. பெருமுதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் போது வர்த்தகம் மீதுள்ள நம்பிக்கையும், தரமான படங்கலுக்கு வரவேற்பும் கிடைக்கும் என கூறியுள்ளார்.

சினிமாத்துறையில் பெரு நிறுவனங்கள் முதலீடு செய்யும் போது விநியோகஸ்தர்களும், மற்ற சினிமாத்துறையை சார்ந்தவர்களும் பாதிப்புக்குள்ளாவது குறைக்கப்படும் என்பதும் குறிப்பிடதக்கது என்றார்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ