Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மொபைல் நம்பர் இனி மும்பை, டெல்லியிலும் செல்லும்!

சென்னை மொபைல் நம்பர் இனி மும்பை, டெல்லியிலும் செல்லும்!

சென்னையில் வசிக்கும் ஒருவர் தனது வேலை காரணமாகவோ அல்லது இதர காரணங்களுக்காகவோ மும்பை அல்லது டெல்லிக்கு  இடம் பெயர்கிறார் எனில், இங்கு பயன்படுத்திய மொபைல் அதே எண்ணை அங்கு சென்றும் பயன்படுத்த முடியாது என்கிற சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால் இனி அப்படி இல்லாமல் சென்னையில் பயன்படுத்திய மொபைல் நம்பைரை மும்பையிலும் பயன்படுத்தலாம் என்று இந்திய டெலிகாம் துறை தெரிவித்துள்ளது.


ஒரே மொபைல் நம்பர், ஒரே நாடு என்கிற அடிப்படையில்தான் இந்தச் சேவை டெலிகாம் துறையால் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது சென்னை ஏரியா மொபைல் நம்பராக இருந்தால் அதே ஏரியாவைச் சேர்ந்த மற்றொரு சர்வீஸ் நிறுவனத்தின் சேவை பெற மாற்றிக் கொள்ள முடியும். இதே போல இனி வெளி மாநிலங்களுக்கு மாறுதலாகி செல்லும் போதும் மாற்றிக் கொள்ளலாம்.

அதே செல்போம் நம்பருடன் சர்வீஸ் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளலாம் என்கிற விதிமுறை அறிமுகமான ஜனவரி, 2011-லிருந்து கடந்த மே,2014 வரை இந்த பயன்பாட்டை 10 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்திருக்கிறார்கள் என்று இந்திய டெலிகாம் துறை தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP