Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த பங்குச்சந்தைகள்!!

இன்று ஏற்றத்தில் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள்  இறக்கத்தில் முடிவடைந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 44 புள்ளிகள் குறைந்து 25201 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 17 புள்ளிகள் குறைந்து 7540 என்ற நிலையில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது.

 இன்ஃபோசிஸ், டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்சிஎல் ஆகிய பங்குகள் விலை அதிகரித்தும், யுனைட்டெட் ஸ்பிரிட், ஒஎன் ஜிசி, பிபிசிஎல், கோட்டக் மஹேந்திரா, ரிலையன்ஸ்  ஆகிய பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகம் ஆனது.


22 காரட் ஆபாரண தங்கத்தின்  ஒரு கிராம் விலை 2616 ரூபாய்க்கும், ஒரு கிராம் வெள்ளி 46.30 ரூபாய்க்கும் விற்பனையானது.

 

 

 

 

 

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடனேயே துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 44 புள்ளிகள் அதிகரித்து 25290 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 4 புள்ளிகள் அதிகரித்து 7562 என்ற அளவிலும் உள்ளன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக 60 ரூபாய்க்கு மேல் இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் ரூபாயின் மதிப்பு அதிகரித்து 59.97 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக இன்ஃபோசிஸ், டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் அதிகரித்தும், ஓஎன்ஜிசி, கோட்டக் மஹிந்த்ரா நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ