Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது பற்றி மூத்த மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.காய்கறிகள், பழங்கள், தானியங்கள் போன்ற உணவு பொருட்களின் விலை உயர்வு காரணமாக, பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அத்துடன், இந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாது என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் கணித்துள்ளது. இதனால், விலைவாசி மேலும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.


ஈராக்கில் மூண்டுள்ள உள்நாட்டு போரால், கச்சா எண்ணெய் விலை உயர்வதுடன், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும் அது வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், உயர்ந்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூட்டினார்.


இந்த கூட்டத்தில், பண வீக்கத்தை சமாளிப்பதற்கான வியூகம் வகுப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், பருவமழை தவறினால் ஏற்படும் நிலைமையை சமாளிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ