Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களுக்கு வைப்புநிதியில் அதிக வட்டி: டி.ஹச்.எஃப்.எல்

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான டி.ஹச்.எஃப்.எல் "சுவயம்சிதா" என்ற பெண்களுக்கான நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி பெண்கள் கணக்கு துவங்கும் போது இலவசமாக விபத்து காப்பீடு ஒரு லட்ச ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

இதில் குறைந்தபட்ச வைப்பு நிதி ரூபாய் 10,000 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 25 லட்ச ரூபாய்க்கு கீழ் உள்ள முதலீடுகளுக்கு 10.60 என்ற விகிதத்திலும், அதற்கு மேல் 10.85 என்ற விகிதத்திலும் வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதில் பென்கள் தனி நபர் கணக்காகவோ அல்லது இருவர் இணைந்தோ கணக்கு துவங்கும் வசதி உள்ளது என்றும், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு காப்பாளர் வசதியுடன் கணக்கு துவங்கலாம் என்றும் டி.ஹச்.எஃப்.எல் தெரிவித்துள்ளது
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ