Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சூரிய எரிசக்தி சாதனங்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும்

சூரிய எரிசக்தி சாதனங்கள் குறைந்த விலையில் எளிதாக கிடைக்க வேண்டும் என்று அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறையின் இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.

புதுடெல்லியில் சூரிய சக்தியால் இயங்கும் நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கான பயிலரங்கை ஜிதேந்திர சிங் துவக்கி வைத்தார்.

கிராமப்புற குடிநீர் விநியோகத்திற்குத் தேவையான புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பயன்பாடுகளை அதிகரிக்க ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள மாவட்டங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இளைஞர்கள் தமக்கு வேறு பாடங்கள் கிடைக்காததால் இதை தேர்வு செய்துள்ளேன் என்ற நிலையில்லாமல் அறிவியல் பாடத்தை விருப்பத்தோடு தேர்வு செய்ய நாம் ஊக்குவிக்க வேண்டும். இதற்கான முயற்சிகளை நாம் முழுமனதோடு எடுக்க வேண்டும் என்றார். இதனால் மட்டுமே நாடு முழுவதும் அறிவியல் மீதுள்ள ஆர்வத்தை அதிகரித்து புது கண்டுபிடிப்புகள் மற்றும் கருத்துகளை கொண்டு வர முடியும். இதற்கான முயற்சிகளை அமைச்சகம் ஏற்கனவே தொடங்கியுள்ளதாகவும், இது தொடர்பான அறிவியல்துறை வல்லுநர்களின் பரிந்துரைகளை ஏற்கத் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

சூரியசக்தி கொண்டு நீர்பாசனம் செய்தல், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த பயிலரங்கில் விவாதிக்கப்படும். இந்தப் பயிலரங்கங்களின் பரிந்துகைள் மின் கம்பிகள் எடுத்து செல்ல முடியாத தொலை தூர கிராமப் பகுதிகளில் சூரியசக்தி கொண்டு குடிநீர் வழங்குதல் மற்றும் நீர்பாசனம் செய்தல் போன்றவற்றை ஏற்படுத்த ஒரு மாதிரித்திட்டமாக அமையும். மேலும், இந்தத் துறையில் ஆய்வுகள் மற்றும் வளர்ச்சிக்கும் இது உதவும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ