Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில் கட்டணம் உயர்வு: மத்திய அரசு விளக்கம்

பயணிகள் ரயில் கட்டணத்தை 14.2 சதவீதம் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சரக்கு கட்டணமும் 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரயில்வே அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.

ரயில் பயணிகள் போக்குவரத்தில் மாதத்திற்கு 900 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த கட்டண உயர்வால் இந்திய ரயில்வே கூடுதலாக 7000 முதல் 8000 கோடி வருமானம் ஈட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரயில் கட்டணம் உயர்வு ஏன்? என்பது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறுகையில், ரயில் கட்டணத்தை கட்டாயமாக உயர்த்தும் சூழல் உருவாகி உள்ளது. எனவே, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உயர்த்த திட்டமிடப்பட்ட அதே 14.2 சதவீத கட்டண உயர்வை தான் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளோம்'' என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ