Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சர்க்கரை இறக்குமதி வரி 40% ஆக உயர்வு

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு இப்போது 15% வரி விதிக்கப்படுகிறது. இதை 40 சதவிகிதமாக அதிகரிக்க மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அனுமதி அளித்திருக்கிறார்கள். இதனால், உள்நாட்டு சர்க்கரை ஆலைகள் லாபம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் சர்க்கரை ஏற்றுமதிக்கான சலுகைகள் செப்டம்பர் வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் உடன் கலக்கப்படும் சர்க்கரை தயாரிப்பில் கழிவான எத்தனால் 5%, பெட்ரோல் உடன் கலக்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இது 10% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ