Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நமோ இலவச ஆன்டி வைரஸ்!

இணைய தள பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. எனினும், 13 சதவிகிதம் பேர் மட்டுமே முறையான லைசென்ஸ் வாங்கிக்கொண்டு ஆண்டி வைரஸ் சாப்ட்ஃவேர் பயன்படுத்துகிறார்களாம்.

30 சதவிகிதம் பேர் டிரயல் வெர்ஷன்களை திரும்ப திரும்ப ரீ-இன்ஸ்டால் செய்து கொள்வதை பழக்கமாக வைத்துள்ளனர். மீதியுள்ள 57 சதவிகித நபர்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல்தான் கம்யூட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்களது கம்ப்யூட்ட்ர் எப்போது வேண்டுமானாலும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பது அவர்களுக்கே தெரியும்.

இந்த நிலையில் சொந்தமாக ஒரு லைசன்ஸ்டு ஆன்டி வைரஸ் சாப்ஃட்வேர் இலவசமாக  கிடைத்தால் எப்படி இருக்கும்..? அந்த மகிழ்ச்சியை கொடுக்க வருகிறது 'நமோ ஆன்டி வைரஸ்' சாப்ஃட்வேர். இந்தியாவை சேர்ந்த 'இன்னோவேஷன்' என்கிற ஐ.டி.நிறுவனம், தான் உருவாக்கியுள்ள ஆன்டி வைரஸ் சாப்ஃவேர் ஒன்றுக்கு 'நமோ' என பெயர் சூட்டியுள்ளது.

இந்த சாப்ஃட்வேர் மால்வேர் மற்றும் வைரஸ் தாக்குதல்களிலிருது கம்ப்யூட்டரை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாம். 

தற்போது அந்த சாப்ஃட்வேரின் அடிப்படை வகை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும்,  விரைவில் விண்டோஸ் மட்டுமின்றி ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர்களுக்கு ஏற்ப அட்வான்ஸ்டு வெர்ஷன்கள் கொண்டுவரப்படும் எனவும் அந்த ஐ.டி. நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய பேசிக் வெர்ஷ்னனுக்கான அப்டேட்டுகள் அவ்வப்போது இலவசமாகவே வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இப்படி நமோ என்று பெயர் வைத்துள்ளதால் தாங்கள் எந்த கட்சி தலைவர்களுடனும் மற்றும் கட்சிகளுடனும் எந்த தொடர்புடையவர்கள் அல்ல என்றும், 'நமோ' என்ற பெயருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது அந்த நிறுவனம். நம்புவோம்!

                                                                                                                - - - நீரை. மகேந்திரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ