Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகின் 3வது மிகபெரிய நெட்வொர்க்: ஏர்டெல்

இந்தியாவின் முன்னனி மொபைல் நெட்வொர்க் நிறுவனமான பாரதி ஏர்டெல், உலகின் மிகப்பெரிய மூன்றாவது நெட்வொர்க் என்ற பெருமையை பெற இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் வரை ஏர்டெல் நிறுவனம் 20 நாடுகளில் சுமார் 297 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இயங்கி வருகிறது.

2010ம் ஆண்டு ஜெய்ன் டெலிகாமின் ஆப்பிரிக்கப் பிரிவு முழுவதையும் 10.7 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது ஏர்டெல். அதன் பின் உலக அளவில் 5-வது இடத்தை ஏர்டெல் பிடித்தது. கடந்த 2012 கணக்கின் படி உலக அளவில் 4-வது இடத்தில் இருக்கும் ஏர்டெல் விரைவில் 3-வது இடத்திற்கு முன்னேற உள்ளதான் அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மனோஜ் கோஹ்லி தெரிவித்துள்ளார்..

சீனா மொபைல், வோடாபோனுக்கு அடுத்து அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள  உலகில் மிகப்பெரிய ஐந்து மொபைல் நிறுவனங்களில் மூன்றாவதாக முன்னேறுகிறது ஏர்டெல் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமின்றி உலகில் உள்ள 20 நாடுகளில் தன் சேவையை அளிக்கும் ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமையையும் ஏர்டெல் நிறுவனம் பெறுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP