Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய வேளாண் காப்பீடு திட்டம் - அமைச்சர் ராதா மோகன்

இயற்கை பேரிடர் ஏற்படும் காலங்களில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் தற்போது உள்ள வேளாண் காப்பீடு திட்டம் இல்லாததால், புதிய வேளாண் காப்பீடு திட்டம் உருவாக்கப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர்  ராதா மோகன் சிங் தெரிவித்தார். பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கிராமங்கள், விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

விவசாய உற்பத்திக்கு நிலத்தின் வளம் முக்கியம். அதனால் எல்லா விவசாயிகளுக்கும் ÔÔநில வளம் அட்டைÕÕ வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வயலுக்கும் நீர் பாசனம், விவசாய பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் கால்நடை நலன் ஆகியவற்றிக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும். இது குறித்து விவரங்கள் வரும் நிதிநிலை அறிக்கையின் பொழுது அறிவிக்கப்படும்.

விவசாய துறையை மேம்படுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே எந்த பாகுபாடும் இருக்காது. ஆனால், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், தேசிய விவசாய மேம்பாடு திட்டம், தேசிய சொட்டு நீர்ப்பாசன திட்டம், தேசிய மூங்கில் இயக்கம் ஆகிய திட்டங்களை மாநிலங்கள் முழுதாக பயன்ப்படுத்தவில்லை என்பது கவலை அளிக்கிறது.

வேளாண் பல்கலைகழங்களின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில், பீகார்-முங்கர், கயா, சரண் மற்றும் சம்பரன் பகுதிகளில் வேளாண் பல்கலைகழகங்களை இல்லை. இந்த இடங்களில் பல்கலைகழகங்கள் நிறுவ மாநிலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்ட குழு, 2009ல் ரூ. ஆயிரம் கோடி பீகாரில் உள்ள ராஜேந்திர வேளாண் பல்கலைகழகத்திற்கு அளித்தது. அப்படி இருந்தும் இந்த பல்கலைகழகம், மத்திய பல்கலைகழகத்தின் அங்கீகாரத்தை பெறவில்லை. இது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும். தேவையான நிலத்தை அளித்தால், பீகாரின் முசாஃபர் பகுதியில் மீன்வள ஆராய்ச்சி நிலையம் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர்  ராதா மோகன் சிங் தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ